உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உடல் அடக்கம் செய்த சேவை அமைப்பினர்

Published On 2023-02-07 09:55 GMT   |   Update On 2023-02-07 09:55 GMT
  • சிகிச்சை பலனின்றி இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
  • சமூக சேவகர் தமிழ்செல்வன், சந்திரசேகர் ஆகியோர் சடலத்திற்க்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.

தருமபுரி, 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நத்தத்தில் கடந்த சில மாதங்களாக 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலை ஓரத்தில் இருந்து வந்துள்ளார்.

மாலை நேரத்தில் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட காவல்துறையினர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணை பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அவரை தேடி எந்த உறவினர்களும் வராத சூழ்நிலையில் தருமபுரி அமரர் சேவை மூலம் இறந்த பெண்ணின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

நாட்றம்பள்ளி போலீஸ் மதி, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், சமூக சேவகர் தமிழ்செல்வன், சந்திரசேகர் ஆகியோர் சடலத்திற்க்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 40 ஆதரவற்ற சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News