உள்ளூர் செய்திகள்
தற்காலிக சாலை அமைப்பது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு மேற்கொண்ட காட்சி.

கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாத கிராமத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு

Published On 2022-09-27 04:26 GMT   |   Update On 2022-09-27 04:26 GMT
  • தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் பகுதியில் தற்காலிக சாலை வசதி மேற்கொள்ளப்பட்டது.
  • ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கூடம் நகர் பகுதியை ஆய்வு செய்தார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் பகுதியில் சாலை வசதி கோரி வரப்பட்ட புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்படி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜய சந்திரிகா கூடம் நகர் பகுதியை ஆய்வு செய்தார்.

மண்சுவரினால் கட்டப்பட்ட தகர வீடுகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு புதிய வீடுகள் ஒதுக்கீடு வரும்போது பணி மேற்கொள்ளப்படும் என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

சாலை அமைத்திட உரிய மதிப்பீடு தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும் என்றும், நிர்வாக அனுமதி கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். அதுவரை தற்காலிகமாக சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், ஊராட்சி செயலாளர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News