உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து கோவில் பசுமாடு உயிரிழப்பு- கிராம மக்கள் சோகம்

Published On 2022-07-26 03:04 GMT   |   Update On 2022-07-26 03:04 GMT
  • கோனாதி கிராம மக்கள் பசுவை கோவில் மாடாக பராமரித்து வந்தனர்.
  • பொதுமக்கள் கோவில் மாடு இறப்பிற்கு பிறகு செய்ய வேண்டிய சம்பிரதாய சடங்குகளை புரோகிதர் மூலம் செய்து கோவில் அருகே பள்ளம் தோண்டி புதைத்தனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கோனாதி கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சாந்தநாயகி உடனுறை காளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பசு மாட்டை வழங்கினார்.

இதனையடுத்து கோனாதி கிராம மக்கள் அந்த பசுவை கோவில் மாடாக பராமரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மேச்சலுக்குச் சென்ற கோவில் பசுமாடு பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த தகவலை அறிந்த கிராம பொதுமக்கள் கோவில் மாடு என்பதால் அதன் இறப்பிற்கு பிறகு செய்ய வேண்டிய சம்பிரதாய சடங்குகளை புரோகிதர் மூலம் செய்து கோவில் அருகே பள்ளம் தோண்டி புதைத்தனர்.

சாந்த நாயகி உடனுறை காளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பசு மாடு இறந்த சம்பவம் கோனாதி கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News