உள்ளூர் செய்திகள்
திருவள்ளூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- செல்வம் பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (58). கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
உடனடியாக செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.