உள்ளூர் செய்திகள்
அச்சரப்பாக்கம் அருகே மழைநீரை அகற்றும் தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
- வீட்டின் அருகே தேங்கிய மழை நீரை அகற்றுவது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாமணி என்பவருடன் மோதல் ஏற்பட்டு வந்தது.
- பலத்த காயம் அடைந்த பாலாமணிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அடுத்த திருமுக்காடு ஊராட்சி மாரியம்மன் கோவில், 3-வது தெருவில் வசித்து வருபவர் எட்டியான். ஓய்வு பெற்ற நில அளவையாளர். வீட்டின் அருகே தேங்கிய மழை நீரை அகற்றுவது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாமணி என்பவருடன் மோதல் ஏற்பட்டு வந்தது.
இதில் ஆத்திரம் அடைந்த எட்டியான், அரிவாளால் பாலாமணியின் கணவர் பொன்னுசாமியை வெட்ட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாமணி தடுக்க முயன்றார். இதில் அவரது கையில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த பாலாமணிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.