உள்ளூர் செய்திகள்

திருத்தணி ரெயில் நிலையத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-08-27 19:48 IST   |   Update On 2022-08-27 19:48:00 IST
  • திருத்தணி அருகே உள்ள சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் பாபு.
  • போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் பாபு (வயது 30). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி திருத்தணி ரெயில் நிலையம் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி செய்து வந்துள்ளார். பின்னர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரெயில் நிலையம் முன்பு போலீசாரின் மோட்டார் சைக்கிள் திருடபட்ட சம்பவம் திருத்தணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News