உள்ளூர் செய்திகள்
சென்னையில் இன்று பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
- இடைநிலை ஆசிரியர்களுக்கான 1743 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- பதவி மூப்பு அப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
சென்னை:
தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குனரக அலுவலகத்தில் திரண்டனர்.
திடீரென்று அவர்கள் கல்வித்துறை இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான 1743 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏற்கனவே பதவி மூப்பு அப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.