உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை-உரம்
- கும்மிடிப்பூண்டி பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய தயாராக உள்ளது.
- விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதி வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார் கூறியதாவது:-
கும்மிடிப்பூண்டி பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் அறுவடைக்குப் பின் பயிர் வகைகளான பச்சைப்பயிறு உளுந்து,ஆகியவற்றை சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்கான விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் உரங்களும் 50 சதவீத மானியத்துடன் வழங்கபடுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.