உள்ளூர் செய்திகள்
வாழைகளை யானை சேதப்படுத்தி உள்ளதை படத்தில் காணலாம்.

உடுமலை அருகே கிராமத்திற்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்

Published On 2023-01-26 05:56 GMT   |   Update On 2023-01-26 05:56 GMT
  • கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டங்களில் புகுந்து நெல், வாழை பயிர்களை சேதப்படுத்தியது.
  • அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் ஊராட்சியில் கோபாலபுரம், இந்திராநகர் ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. இங்கு விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டங்களில் புகுந்து நெல், வாழை பயிர்களை சேதப்படுத்தியது. விவசாயிகள் தீப்பந்தம் கொண்டு விரட்டினாலும், மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதையடுத்து அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் காட்டு யானை ஊருக்குள் புகாதவாறு விரட்டும் வகையில் வனத்தையொட்டிய பகுதியில் வன அதிகாரிகள், ஊழியர்கள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News