உள்ளூர் செய்திகள்

குரங்குகளை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டை படத்தில் காணலாம்.


பெருந்துறை அருகே ஊருக்குள் நுழைந்து குரங்குகள் அட்டகாசம்

Published On 2022-06-19 11:02 GMT   |   Update On 2022-06-19 11:02 GMT
  • உணவு தேடி இடம் பெயர்தல் காரணமாக பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் தஞ்சமடைந்து அட்டகாசம் செய்து வருகிறது.
  • பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் செல்லுவதால் பொதுமக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் பெண்கள் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதி மற்றும் சென்னிமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகிறது.

இந்நிலையில் உணவு தேடி இடம் பெயர்தல் காரணமாக பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் தஞ்சமடைந்து அட்டகாசம் செய்து வருகிறது.

பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் செல்லுவதால் பொதுமக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் பெண்கள் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர். குழந்தைகளை சிலநேரம் குரங்குகள் துரத்துகின்றன.

இதன் காரணமாக அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறை அலுவலர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க காஞ்சிகோவில் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குரங்குகளுக்கு பிடித்த உணவுடன் கூடிய இரும்பு கூண்டுகளை வைத்துள்ளனர்.

இதனையடுத்து பிடிபடும் குரங்குளை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News