உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயமடைந்த போலீஸ்காரருக்கு உதவிய அமைச்சர் நமச்சிவாயம்.

விபத்தில் காயமடைந்த போலீஸ்காரருக்கு உதவிய அமைச்சர் நமச்சிவாயம்

Published On 2022-11-07 09:46 GMT   |   Update On 2022-11-07 09:46 GMT
  • விபத்தில் தூக்கி வீசப்பட்ட தமிழ்மணியும் அவருடன் வந்தவரும் காயமடைந்தனர்.
  • அந்த வழியாக காரில் சென்ற அமைச்சர் நமச்சிவாயம், விபத்தில் காயமடைந்தவர்களை பார்த்தார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 40). புதுவை காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒதியம்பட்டு சாலையில் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்மணியும் அவருடன் வந்தவரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற அமைச்சர் நமச்சிவாயம், விபத்தில் காயமடைந்தவர்களை பார்த்தார்.

உடனே தனது காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக வரவழைத்தார். அந்த வாகனத்தில் காயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News