உள்ளூர் செய்திகள்

புனித வெள்ளியை முன்னிட்டு பொன்னேரியில் சிலுவை தியான ஊர்வலம்

Published On 2023-04-08 15:34 IST   |   Update On 2023-04-08 15:34:00 IST
  • பொன்னேரி சுற்றுவட்டார சபை விசுவாசிகள் குழுவாக பாடல் பாடி இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்து ஊர்வலமாக சென்றனர்
  • கிறிஸ்தவ போதகர்கள் இணைந்து நடத்திய சிலுவை தியான ஊர்வலம் தடப்பெரும்பாக்கத்தில் ஆல் மைட்டி காட் சபையில் இருந்து பாஸ்டர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

பொன்னேரி:

புனித வெள்ளியை முன்னிட்டு பொன்னேரியில் அனைத்து கிறிஸ்தவ போதகர்கள் இணைந்து நடத்திய சிலுவை தியான ஊர்வலம் தடப்பெரும்பாக்கத்தில் ஆல் மைட்டி காட் சபையில் இருந்து பாஸ்டர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விசுவநாதன், தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலமானது பொன்னேரி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வழியாக எல் இ எஃப் சர்ச்சில் முடிவடைந்தது.

இதில் பொன்னேரி சுற்றுவட்டார சபை விசுவாசிகள் குழுவாக பாடல் பாடி இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்து ஊர்வலமாக சென்றனர். இதில் ஒருவர் இயேசுவைப்போல் வேடமணிந்து சிலுவை மரத்தில் தொங்கிய படி சென்ற காட்சி பரவசத்துடன் காணப்பட்டது. ஊர்வலத்தில் பிஷப்மார்கள், போதகர்கள், ஊழியர்கள், விசுவாசிகள், சுவிசேஷகர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News