உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாயில் சிக்கும் கடல் மீன்களை வாங்க ஆர்வம்
- மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் கடந்த 2 நாட்காக நல்ல மழை பெய்து வருகிறது.
- கடல் மீன்கள் மற்றும் விலாங்கு, கெண்டை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் மீனர்களின் வலையில் சிக்குகின்றன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் கடந்த 2 நாட்காக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் பக்கிங்காம் கால்வாயில் கொட்டும் மழையில் துடுப்பு படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
கடலின் முகத்துவாரம் பகுதியில் இருந்து வரும் இறால், பாறை, வஞ்சிரம் போன்ற கடல் மீன்கள் மற்றும் விலாங்கு, கெண்டை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் மீனர்களின் வலையில் சிக்குகின்றன.
இதனை அசைவ பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.500 வரை விற்கப்படுகிறது.