உள்ளூர் செய்திகள்

சேலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தத்தில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வருமான வரித்துறை சோதனை

Published On 2022-11-02 17:42 IST   |   Update On 2022-11-02 17:42:00 IST
  • ஜவுளிகள் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளன, அவை என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, என்ன விலையில் விற்கப்படுகிறது.
  • முறையாக பில்கள் போடப்படுகிறதா, வருமான வரி கணக்கில் கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம்:

சேலம் டி.வி.எஸ். ரோடு பகுதியில் பிரபல ஜவுளி கடைகள் உள்ளன. இதில் ஒரு ஜவுளிக்கடைக்கு நீலகிரி, கரூர், குளித்தலை உள்பட பல பகுதிகளில் கிளை நிறுவனங்களும் உள்ளன.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜவுளி விற்பனையில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறைக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து சென்னை மற்றும் கோவையிலிருந்து வருமானத்துறை அதிகாரிகள் நேற்று இரவு சேலம் வந்தனர். அவர்களுடன் சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளும் இணைந்து இன்று காலை 8 மணி அளவில் அதிரடியாக அந்த கடைக்குள் நுழைந்தனர்.

பின்னர் கடையில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. கடையின் ஷட்டர் பாதி நிலையில் பூட்டப்பட்டது. அங்கு இருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு அறையையும், ஒவ்வொரு தளத்தையும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

அப்போது ஜவுளிகள் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளன, அவை என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, என்ன விலையில் விற்கப்படுகிறது, முறையாக பில்கள் போடப்படுகிறதா, வருமான வரி கணக்கில் கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் காடு டிஸ்க்களையும், பில்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர். முக்கிய ஆதாரங்கள் வருமானத்துறை அதிகாரிகளுக்கு சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதையொட்டி அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மற்ற கிளைகளிலும் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News