உள்ளூர் செய்திகள்
ராயக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை பலி
- வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
- நள்ளிரவு மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.