உள்ளூர் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2022-11-19 12:49 IST   |   Update On 2022-11-19 12:49:00 IST
  • திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
  • மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 253 கன அடியாக குறைந்துள்ளது.

பூந்தமல்லி:

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியது. இதனால் கடந்த 2-ந் தேதி முதற்கட்டமாக 100 கனஅடி உபரி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 1000 கன அடி வரை உயர்த்தப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் தற்போது 20.13அடியாகவும், மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் தற்போது 2635 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது. மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 253 கன அடியாக குறைந்துள்ளது. ஆனால் உபரிநீர் வெளியேற்றம் தொடர்ந்து 800 கன அடியாக உள்ளது. மேலும் வரும் நாட்களில் மழை பொழிவு இருந்து நீர்வரத்து அதிகரித்தால் உபரி நீர் அளவு அதிகரிக்கப்படும் எனவும், தற்போது ஏரியின் நீர்மட்டம் 20 அடியை கடந்துள்ளதால் ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Similar News