உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்த தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Published On 2023-04-01 14:10 IST   |   Update On 2023-04-01 14:10:00 IST
  • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.
  • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.

தாம்பரம்:

தாம்பரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலராக செந்தில் வேலன் மற்றும் ஆய்வாளராக சோமசுந்தரம் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இதில் சோமசுந்தரம் கடந்த 29ம் தேதி ஒரு நாளில் மட்டும் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் உட்பட சுமார் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்ததாக கூறப்பட்டதுடன் இது குறித்த புகார்கள் போக்குவரத்து ஆணையருக்கு சென்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன் உடனடியாக விடுவிக்கப்பட்டு சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் யுவராஜ் தாம்பரம் வட்டார போக்குவரத்து பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நான் ஒரு விண்ணப்பங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கிய ஆய்வாளர் சோமசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கே.கே நகர் வட்டார போக்குவரத்து அமலாக்க பிரிவில் இருந்த கார்த்திக் என்பவர் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News