உள்ளூர் செய்திகள்

ஆரணி பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம்

Published On 2023-01-11 10:45 GMT   |   Update On 2023-01-11 10:45 GMT
  • ஆரணி பேரூராட்சி மன்ற வளாகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
  • சுபாஷினி, முனுசாமி, சுஜாதா, ரகுமான்கான், சந்தானலட்சுமி குணபூபதி, பொன்னரசி, குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி மன்ற வளாகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் வழக்கறிஞர் கே.சுகுமார், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இளநிலை உதவியாளர் யுவராஜ் 15 தீர்மானங்களை வாசித்தார். இதில், அம்ருத் 2.0 திட்டத்தில் இப்பேரூராட்சியில் ரூ.7.98 கோடியில் மத்திய, மாநில அரசு நிதி,பேரூராட்சி பங்களிப்புடன் மேற்கொள்வது என்றும் அதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோறுவது என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதில், 9 மற்றும் 11-வது தீர்மானங்களை வாசிக்கும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அந்த 2 தீர்மானங்கள் மீது 24-ம் தேதி விவாதம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இதன்பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அருணா, கௌசல்யா, பிரபாவதி, சதீஷ், சுகன்யா, சுபாஷினி, முனுசாமி, சுஜாதா, ரகுமான்கான், சந்தானலட்சுமி குணபூபதி, பொன்னரசி, குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வரி தண்டலர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News