உள்ளூர் செய்திகள்

கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என வணிகர்கள், மது பிரியர்கள் கூட்டம் நடத்திய போது எடுத்தப்படம்.

மதுக்கடை அகற்றும் அ.தி.மு.க. போராட்டத்திற்கு மது பிரியர்கள் எதிர்ப்பு: போட்டி போராட்ட அறிவிப்பால் பரபரப்பு

Published On 2023-09-28 16:18 IST   |   Update On 2023-09-28 16:18:00 IST
  • நாளை (வெள்ளிக்கிழமை) கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
  • ஒரே ஊரில் மதுபான கடை வேண்டும் என்று மது பிரியர்களும், வேண்டாம் என்று அரசியல் கட்சியினரும் போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் இயங்கிவந்த 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் பொதுமக்களின் போராட்டம் காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது.

அதன் பிறகு இங்கு மதுக்கடைகள் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த வாரத்தில், கொத்தமங்கலத்தில் மீண்டும் மதுபானக்கடை திறக்கப்பட்டது.

இதையடுத்து அந்த கடையை அகற்ற கோரி அ.தி.மு.க. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த 200க்கும் மேற்பட்ட அப்பகுதி வணிகர்கள், மதுபிரியர்கள் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினர். அதில் மதுக்கடையை அகற்றக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கடையை அகற்றக்கோரி அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினால், அவர்களை எதிர்த்து கடையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி அதே இடத்தில் அதிக நபர்களை திரட்டி எதிர் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஒரே ஊரில் மதுபான கடை வேண்டும் என்று மது பிரியர்களும், வேண்டாம் என்று அரசியல் கட்சியினரும் போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News