உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டாரத்தில் பருத்தி பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கப் படுவதை படத்தில் காணலாம்.

பருத்தி பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்க மானியம்

Published On 2022-09-11 07:33 GMT   |   Update On 2022-09-11 07:33 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  • டிரோன் மூலம் பருத்தி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி காய் காய்த்து அறுவைடைக்கு தயாராகும் நிலையில் மாவு பூச்சி, இலைபேன் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பூச்சி மருந்து தெளிக்க செலவு அதிகமாகிறது. டிரோன் மூலம் பருத்தி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 அல்லது 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் நீடித்த நிலையான பருத்தி இயக்கத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற கூடுதல் செலவுகள், நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக பூச்சி மருந்து செலவும் குறைவாகிறது.

எனவே பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News