உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.


திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் மாதக்கணக்கில் நடக்கும் சாலை பணியால் மாணவர்கள் தவிப்பு

Published On 2022-06-14 08:24 GMT   |   Update On 2022-06-14 08:24 GMT
  • திண்டுக்கல்லில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்
  • சாலை பணியை விரைவு படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் :

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு கம்பிகள் பொருத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் நடக்கவில்லை.

இருபுறமும் ஒரு கார் அல்லது ஆட்டோ மட்டுமே செல்ல வழி உள்ளது. மற்ற வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சரளைக் கற்கள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டி உள்ளது. கடந்த 1 மாதமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு இருந்த காலத்திலேயே இப்பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.

இரவு நேரங்களில் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாததால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்லும் இந்த சாலையில் ஆபத்தை உணராமல் வாகனங்கள் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News