உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-11-12 15:09 IST   |   Update On 2022-11-12 15:09:00 IST
  • கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

பெரும்பாலை, 

தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையூரில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடல் புழு நீக்குதல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல் ,கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்தல், இதில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் சிறப்பாக கால்நடைகளை வளர்த்த பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் உதவி இயக்குனர் மணிமாறன், கால்நடை உதவி மருத்துவர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் திருவேங்கடம், தேவராஜ், சரவணன், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News