உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

2-வது திருமணம் செய்த தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்கள் கைது

Published On 2022-10-29 11:06 IST   |   Update On 2022-10-29 11:06:00 IST
  • 2-வது திருமணம் செய்த தந்தையை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது விசாரித்து வருகின்றனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஊத்தாங்கால் புதுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(49). தென்னைமரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சற்குணபாண்டி(23), புவனேஸ்குமார்(19) என 2மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா உயிரிழந்துவிட்டார். இதேபோல் ஜெயாவின் தங்கை பாண்டியம்மாளின் கணவரும் இறந்துவிட்டார்.

இதனால் தனிமையில் இருந்த 2 பேரும் கடந்தமாதம் 2-வது திருமணம் செய்து கொண்டனர். இதனால் சற்குணபாண்டி மற்றும் புவனேஸ்குமார் ஆத்திரமடைந்தனர். அவர்கள் பாண்டி மற்றும் பாண்டியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டியை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த பாண்டியம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

காயமடைந்த அவர்களை வத்தலக்குண்டு அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குபதிவுசெய்து சற்குணபாண்டி மற்றும் புவனேஸ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News