உள்ளூர் செய்திகள்

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Published On 2023-11-27 15:03 IST   |   Update On 2023-11-27 15:03:00 IST
  • பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு வழங்கப்படும்
  • விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம், திட்ட இயக்குநர் (அட்மா) வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (விதை உற்பத்தி) என்ற தலைப்பில் வருகிற 11.12.2023 முதல் 16.12.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ளது.

வேளாண் அறிவியல் நிலைய பேராசியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்று பயிற்சியை நடத்தவுள்ளனர்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் 18 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தாங்களே போக்குவரத்து செலவினம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பயிற்சியில் 2 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா, மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு அழைத்துச் சென்று விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் முதல் நாள் பங்கு பெறும் விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து 6 நாட்கள் பங்கேற்க வேண்டும்.

தொடர்ந்து விடுப்பின்றி கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மட்டும் பயிற்சியின் இறுதிநாள் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில்

நடைபெறுகிறது.

விதை உற்பத்தியில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் தங்களது பெயரை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு 30.11.2023க்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News