உள்ளூர் செய்திகள்

மக்கள் நீதிமன்றம் நடந்தபோது எடுத்த படம்.

ராசிபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 37 கடன்களுக்கு தீர்வு

Published On 2022-11-11 10:06 GMT   |   Update On 2022-11-11 10:06 GMT
  • ராசிபுரத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
  • இதில் 37 கடன்களுக்கு தீர்வு காணப்பட்டது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளின் வழிகாட்டுதல் படி மக்கள் நீதிமன்றம் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நல்லதம்பி, உறுப்பினர் வக்கீல் செல்வகுமார் மற்றும் உறுப்பினர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

ராசிபுரம், அத்தனூர், தொ.ஜேடர்பாளையம், வடுகம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கிகளின் கிளைகள் மூலம் வழங்கப்பட்ட கடன்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்படி 37 கடன்களுக்கு ரூ.38 லட்சத்து 42 ஆயிரத்து 750-க்கு தீர்வு காணப்பட்டது. இதில் இந்தியன் வங்கி கிளைகளைச் சேர்ந்த மேனேஜர்கள், கடன்தாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News