உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கூட்டுறவு சங்கங்களில் ஆதார் பதிவு முகாம் முதியோர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-06-22 05:49 GMT   |   Update On 2022-06-22 05:49 GMT
  • ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.
  • சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.

உடுமலை :

ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவாகாத கார்டுதாரருக்கு பதிவேட்டில் கையொப்பம் பெற்று, ரேஷன் பொருள் வழங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் மாவட்டத்தின் பல கடைகளில் இத்தகைய உத்தரவு பின்பற்றப்படுவதில்லை.

அதிகாரிகளும் மேலாய்வு நடத்தவில்லை.கைவிரல் ரேகை பதிவு செய்ய இயலாதவரின், ஆதார் பதிவுகளை அப்டேட் செய்ய வேண்டுமெனஅரசு உத்தரவிட்டுள்ளது.அதற்காக பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்கும் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது வழக்கமாக ஆதார் பதிவு நடக்கும் இடத்திலேயே, அப்டேட் பதிவு முகாம் நடப்பதாக அறிவிப்பு செய்கின்றனர்.

இதுகுறித்து ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.அப்படியே தகவல் தெரிந்தாலும், நடமாட முடியாத மற்றும் பஸ்சில் சென்றுவர சிரமப்படும் முதியோர் என ஒவ்வொரு கிராமத்திலும் ஏராளமான கார்டுதாரர்கள், அப்டேட்செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு முறையும் நடக்கும் இம்முகாம்களால் பயன்பெறுவோர் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்.பொதுமக்கள் வசதிக்காக, ஆதார் அப்டேட்முகாம்களை தொலைவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடத்தாமல் கூட்டுறவு சங்கங்கள் வாரியாக நடத்த திட்டமிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாதிக்கப்பட்ட முதியோர் சிலர் கூறியதாவது: -

தாலுகா அலுவலகம் சென்றுவர முடியாததால், கைவிரல் ரேகை புதுப்பிக்க இயலாமல் தவிக்கிறோம். சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.மாறாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை என வாரம் ஒருநாள் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் ஆதார் பதிவு முகாம் நடத்தினால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானவர்கள் பயன்பெறுவர்.மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளுடன் ஆலோசித்து தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.  

Tags:    

Similar News