உள்ளூர் செய்திகள்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகள் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் விழா

Published On 2022-09-24 10:51 GMT   |   Update On 2022-09-24 10:51 GMT
  • உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
  • மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தஞ்சாவூர்:

தஞ்சை தமிழ் பல்கலைக்க ழகத்தில் இன்று பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு அரசு தலைமை கொறடா கோவி. செழியன், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் தலைமை தாங்கினர்.

தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மரக்கன்றுகள் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.

பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதுபோல் தற்போது மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஆக்கப்பூர்வமானகருத்து யார் கூறினாலும் நடவடி க்கை எடுக்கப்படும்.

மாறாக அரசியல் காழ் புணர்ச்சியோடு யாராவது கருத்து கூறினால் அதை பற்றி யோசிக்க வேண்டாம்.‌

நாம் தொடர்ந்து மக்களுக்கு நல்லவித பணிகளை செய்வோம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி மாவட்ட ங்கள் தொடர்ந்து செயல்படும்.

தஞ்சாவூர்மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களோடு இணைக்கப்படாது.

தமிழகத்தில் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது.

ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்கள்.

அதற்கு இறையாண்மைக்கு எதிராக செயல்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News