உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் நீலம் ரக மாம்பழம் விற்பனை படுஜோர்

Published On 2023-07-21 15:28 IST   |   Update On 2023-07-21 15:28:00 IST
  • இந்த ஆண்டு ஏப்ரலில் சீசன் தொடங்கி மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தன.
  • மொத்த விலையில், கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், கம்பைநல்லூர், தீர்த்தமலை, இருமத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நீலம் ரகம் மாம்பழம் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நாமக்கல், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், மாம்பழம் அதிகம் விளைகிறது. இங்கு உற்பத்தியாகும் மாம்பழங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரலில் சீசன் தொடங்கி மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது இமாம், அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா, ருமானி, மல்கோவா, லட்டு, சக்கர குட்டி, கிளி மூக்கு, செந்தூரா உள்ளிட்ட பல வகை மாம்பழங்கள் சீசன் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், நீலம் ரகம் மாம்பழங்களின் வரத்து, பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு அதிகரித்து உள்ளது. தற்போது தருமபுரி மார்க்கெட்டுகளில் நீலம் ரகம் மாம்பழம் குவிய தொடங்கியுள்ளது. இவை மொத்த விலையில், கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Tags:    

Similar News