உள்ளூர் செய்திகள்
இருகரைகளும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும் காட்சி.
கே.ஆர்.பி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்
- வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- காவேரிபட்டணம் ஆற்றில் இருகரைகளும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் 2800 கன அடி நீரும் பிரதான மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதனால் இன்று காவேரிபட்டணம் ஆற்றில் இருகரைகளும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது.
இதனை ஏராளமான பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் பாலத்தின் மீது நின்று பார்த்து செல்கின்றனர். மேலும் ஏராளமான மக்கள் செல்பியும் எடுத்து செல்கின்றனர்.