உள்ளூர் செய்திகள்

ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-12-22 15:37 IST   |   Update On 2022-12-22 15:37:00 IST
  • பொருள்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்
  • தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வாலாஜா நகராட்சி கச்சால் நாயக்கர் தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி நியாய விலை கடையில் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அரிசி இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்பொழுது பொருள்கள் வழங்கப்பட்ட விவரங்கள், தற்பொழுது இருப்பு உள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவைகளை எடை போட்டு ஆய்வு செய்தார்.பொருட்கள் இருப்பு எடை அளவை ஆகியவற்றை கைபேசி செயலின் மூலம் பதிவேற்றம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடைகளிலும் அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பில் உள்ள பொருள்களில் எடை அளவை ஆய்வு செய்து பொருட்களின் எடை அளவு சரியாக இருக்கின்றது என தெரிவித்தார்.மேலும் பொதுமக்களிடம் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீரென ஆய்வு செய்து மையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற இருந்ததை பார்வையிட்டு முறையாக குழந்தைகளுக்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் தண்ணீர் வசதிகள் இல்லை, இதனை உடனடியாக சரி செய்து தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்.

குழந்தைகளுக்கு சுகாதாரமான சூழ்நிலையை மையத்தில் அமைத்து கொடுக்க வேண்டும் என அங்கன்வாடி மைய ஊழியருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், வட்டாட்சியர் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News