உள்ளூர் செய்திகள்

காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்- எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

Published On 2022-11-07 07:50 GMT   |   Update On 2022-11-07 07:50 GMT
  • ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
  • அதிகாரிகள், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவல கத்தில் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன் வரவேற்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் செல்லும் பாதைகளை சரி செய்து தேங்காமல் செல்லும் வகையில் உடனுக்குடன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழை, வெள்ள நீரை அகற்றுவதுடன் கொசுக்கள் அதிகரிப்பதை தடுத்து கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்ப ளித்து செயல்பட வேண்டும்.

தண்ணீர் செல்ல முடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.ஆபத்தான மின்கம்பங்கள் குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகராட்சி கவுன்சி லர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News