உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டியளித்த காட்சி.

கல்குவாரி லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

Published On 2023-01-04 09:51 GMT   |   Update On 2023-01-04 09:51 GMT
  • ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வந்தன.
  • லாரிகளை இயக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை கிரஷர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கொரட்டகிரி கிராமத்தில் 6 ஜல்லி கிரஷர் குவாரிகள் உள்ளன. கிரஷரில் கொரட்டகிரி கிராமம் வழியாக இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வந்தன.

குவாரிகளால் வீடுகள் விரிசல் ஏற்படுவதாகவும், சாலைகள், விலைநிலங்கள் பாதிப்படைவதாக எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8 மாதங்களாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் லாரிகள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் குவாரி உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம் கொரட்டகிரி கிராமம் வழியாக டிப்பர் லாரிகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

கடந்த 29-ம்தேதி கிரஷர் உரிமையாளர்கள் டிப்பர் லாரிகளை இயக்கிய போது மீண்டும் கிராம மக்கள் லாரிகளை இயக்கவிடாமல் தடுத்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி கடந்த ஐந்து நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கிரஷர் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் சம்பங்கி,மாவட்ட செயலாளர் பிரேம்நாத், துணை செயலாளர் மது, சர்வேஸ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வேறு மாற்று வழியில் கிரஷர் லாரிகளை இயக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை கிரஷர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News