உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-09-08 14:41 IST   |   Update On 2023-09-08 14:41:00 IST
  • கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
  • அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு

புதுக்கோட்டை

அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் 33 கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை பயிற்சி, நில அளவைப்பயிற்சி, சிறப்பு தேர்வுகள் அடங்கிய தகுதிக்கான பருவம் விளம்பல் ஆணைக்கான தேதியை இரண்டாண்டு பணி நிறைவு செய்த தேதியில் நிர்ணயம் செய்து திருத்தி அமைக்கக்கோரி அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் கோரிக்கையை பரிந்துரை செய்யாத கோட்டாட்சியரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களுடன் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெயபால் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது தங்களுடைய கோரிக்கையை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News