உள்ளூர் செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-07 12:39 IST   |   Update On 2022-08-07 12:39:00 IST
  • குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • 40 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் 40 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான சாலை யால் மழைநீர் தேங்கி செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி பொது மக்கள் அவதியுற்று வந்த நிலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.கண்டியன் தெரு பகுதியில் 5 இடங்களில் பேவர் பி ளாக் சாலை அமைக்கப்பட்டது. கண்டியன் தெரு அருணாச்சலம் இல்லம் முதல் தமிழ்வாணன் என்பவரது இல்லம் வரை தனி நபர் ஆக்ரமிப்பால், பேவர் பிளாக் சாலை அமைக்க அளவீடு செய்ய வில்லை.

எனவே அதனை முறையாக அளவீடு செய்து சாலை அமைக்குமாறு கறம்பக்குடி பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினரிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக ஊர்கமிட்டி தலைவர் ஞானச்சந்திரனிடம் மனு அளித்தனர்.

மனுவை பரிசீலனை செய்த அன்றைய வட்டாட்சியர் விஸ்வநாதன் பேரூராட்ச்சிக்குட்பட்ட சாலை என்பதால் மனுவை பேரூராட்சி செயல் அலுவலர் கார்திக்கேயனுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்ககோரி கடிதம் அனுப்பினார். ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்காத, பேரூராட்சி நிர்வாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோ ரியும். தங்களுக்கு முறையான அளவீடு செய்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News