உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

Published On 2022-09-07 08:15 GMT   |   Update On 2022-09-07 08:15 GMT
  • பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுதாஅடைக்கலமணி மற்றும் துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்

புதுக்கோட்டை :

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுதாஅடைக்கலமணி மற்றும் துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜூ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சிவரஞ்சனி, பிரியங்கா, பழனியப்பன், வளர்மதி, பழனியாண்டி, ஆதிலட்சுமி, முருகேசன், மாணிக்கம், அடைக்கலமணி, அழகுரத்தினம், கல்யாணி, செந்தில் விஜயா, பழனிச்சாமி உள்ளிட்டோர் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பத்து ஆண்டுகளாக துரைசாமி என்பவர் அரசு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து எந்த ஒரு விபத்துகளும் இல்லாமல் நல்ல முறையில் வாகனத்தை இயக்கி பராமரித்து வந்ததற்காக ரூ.500 ஊக்கத்தொகையை தமிழக அரசின் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி சேர்மன் சுதா அடைக்கலமணி ஆகியோர் துரைசாமியிடம் வழங்கினர். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா அன்று துரைசாமி மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் சிறந்த ஓட்டுநருக்கான சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News