உள்ளூர் செய்திகள்

மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் பேரி கார்டுகள் அமைத்து கடலோர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மரக்காணம் அருகே கடல் பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

Published On 2022-12-12 12:57 IST   |   Update On 2022-12-12 12:57:00 IST
  • மக்கள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம்.
  • மக்கள் அனுமதி கிடையாது என மரக்காணம் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளார்கள் .

விழுப்புரம்: 

மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடற்கரை உள்ளது. இப்பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம். மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் கடலி்ல் சீற்றம் குறையவில்லை. இதனால் மீனவர்களே மீன் பிடிக்க கடலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி கடலில் குளிப்பதற்கும், பார்வையிடவும் நேற்று சுற்றுவட்டார கிராம மக்கள் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலோர காவல் படையினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி அங்கு பொதுமக்கள் வருவதை கண்ட கடலோர காவல் படையினர் இ.சி.ஆர்.-ல் பேரிகார்டுகள் வைத்து பொதுமக்களை ஏற்றி வந்த ஆட்டோ, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் திருப்பி அனுப்பினர். மேலும், ஏற்கனவே தீர்த்தவாரி கடல் பகுதிக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தி கடல் சீற்றத்தால் அலைகள் ஆர்பரித்து வருகின்றன. இதனால் கடற்கரை ஆழமாக இருப்பதால் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவே அனுமதி கிடையாது என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும், இந்த வாரம் முழுவதும் தீர்த்தவாரி கடல் பகுதிக்கு பொது மக்கள் அனுமதி கிடையாது என மரக்காணம் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளார்கள் 

Tags:    

Similar News