உள்ளூர் செய்திகள்
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா
- பேராசிரியருமான அன்பழகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
- அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரும்பாலை,
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பஸ் ஸ்டாண்டில் தி.மு.க. முன்னாள் பொது செயலாளரும் பேராசிரியருமான அன்பழகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பொதுமக்ககளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,மாவட்ட பிரதிநிதி தனபாலன், ஏரியூர் ஒன்றிய துணை செயலாளர்கள் சம்பத்குமார், சின்னு மஞ்ச நாயக்கன அள்ளி கவுன்சிலர் வையாபுரி, ராமகொண்ட அள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணன், நாகமரை ஊராட்சி செயலாளர் திருமுருகன், மஞ்சாரள்ளி புஷ்பராஜ், ஏரியூர் பகுதி கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.