உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

Published On 2023-05-22 10:16 GMT   |   Update On 2023-05-22 10:16 GMT
  • எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது.
  • 1200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

விழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.

பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் அனைவரையும் வரவே ற்றார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் குழ.செ.அருள்நம்பி, ஊமத்தநாடு ஊராட்சி மன்ற தலைவர் என். குலாம்கனி, காரைக்குடி அழகப்பா கல்வி குழுமம் சி.மாதவன், பேராவூரணி நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ், வீரியங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா அய்யப்பன், கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பெருமகளூர் பேரூராட்சி பெருந்தலைவர் சுந்தரதமிழ் ஜெயபிரகாஷ், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், கரம்பக்காடு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா குகன், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வி.சாந்தி, மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.

பள்ளி கொடியினை டாக்டர் துரை. நீலகண்டன் ஏற்றி வைத்தார். மாணவர்க ளுக்கான போட்டியினை மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் தென்னங்குடி ஆர்.ராஜா துவக்கி வைத்தார். மாணவிக ளுக்கான போட்டியினை புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவர் எஸ்.ஆர்.சந்திரசேகர் துவக்கி வைத்தார்.உடற்கல்வி ஆசிரியர்கள்எம்.சோலை, குழ.மதியழகன், என்.ரவி,ஏ.அன்பரசன், கே. அழகப்பன, எஸ் , சங்கீதா, பாரதிதாசன் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர்எஸ்.நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு தடகள போட்டி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை 6ம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை படித்த மாணவ- மாணவிகளுக்கு தடகள போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 50 மீட்டர்,100 மீட்டர்,200 மீட்டர், 400 மீட்டர்,600 மீட்டர்,1200 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News