உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதி தமிழர் பேரவையினர் ஆர்பாட்டம்

Published On 2023-03-07 15:38 IST   |   Update On 2023-03-07 15:38:00 IST
  • சீமான் ஈரோடு இடைத்தேர்தலின்போது தங்களது சமூக மக்களை இழிவாக பேசியுள்ளார்.
  • சீமானின் உருவ பொம்மையை திடீரென சாலையில் எரித்து செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆதி தமிழர் பேரவையினர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி, சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு இடைத்தேர்தலின்போது தங்களது சமூக மக்களை இழிவாக பேசியதாகவும், சீமான் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்ற நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையினர் சீமானின் உருவ பொம்மையை திடீரென சாலையில் எரித்து செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News