உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

லோயர்கேம்ப் மினிபவர் ஹவுசில் மின்உற்பத்தி பாதிப்பு

Published On 2022-06-29 04:38 GMT   |   Update On 2022-06-29 04:38 GMT
  • பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இப்பகுதியில் தண்ணீர் தேக்கி லோயர்கேம்ப் மின்பவர் ஹவுசில் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
  • கடந்த 28 நாட்களாக இங்கு மின்உற்பத்தி நடைபெறாததால் மின்இழப்பு ஏற்பட்டுள்ளது.

கூடலூர்:

முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதேபோல லோயர்கேம்பில் ெதாடங்கும் முல்லைபெரியாற்றில் குருவனூத்து பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுகாடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 4 இடங்களில் மினிபவர் ஹவுஸ் உள்ளது.

பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இப்பகுதியில் தண்ணீர் தேக்கி மின்உற்பத்தி செய்யப்படுகிறது. குருவனூத்து பாலம் அருகே மினிபவர் ஹவுசில் தலா 2 மெகாவாட் வீதம் 4 மெகாவாட் மின்உற்பத்தி செய்யமுடியும். முல்லைபெரியாற்றில் இருந்து கடந்த 1-ந்தேதிமுதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு 1000 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த 28 நாட்களாக இங்கு மின்உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் இங்கு மின்இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற 3 மினிபவர் ஹவுசிலும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மின்உற்பத்தி நடக்காதது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக உள்ளது. வரத்து 272 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 4352 மி.கனஅடி.

வைகை அணை நீர்மட்டம் 53.25 அடி, வரத்து 505 கனஅடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 2468 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.50அடி, வரத்து 20 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 85.11 அடி, திறப்பு 3 கனஅடி.

Tags:    

Similar News