ஒகேனக்கல்லில் விடிய, விடிய போலீசார் சோதனை
- 40 போலீசார் நேற்று விடிய விடிய ஒகேனக்கல்லில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு எப்போதுமே சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும்.
இருப்பினும் இன்று புத்தாண்டு பிறப்பதை யொட்டி நேற்று வழக்கத்தை விட கூடுதல் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்தனர்.
இதையடுத்து பென்னாகரம் போலீஸ் டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 40 போலீசார் நேற்று விடிய விடிய ஒகேனக்கல்லில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
புத்தாண்டு பிறப்பை யொட்டி எவ்விதமான அசம்பாவிதங்களும் நடந்து விட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.