உள்ளூர் செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அக்னிபாத் திட்ட விவகாரம்- ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2022-06-19 14:43 IST   |   Update On 2022-06-19 14:43:00 IST
  • இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு:

இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர்.

Tags:    

Similar News