உள்ளூர் செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு இணையாக பணியாற்றியவர் உதயநிதி - அமைச்சர் பேட்டி

Published On 2022-12-13 08:41 GMT   |   Update On 2022-12-13 08:41 GMT
  • மு.க.ஸ்டாலினுக்கு இணையாக பணியாற்றியவர் உதயநிதி என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
  • சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில்

பெரம்பலூர்:

பெரம்பலூரில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மாணவர்களின் நலன் கருதி இந்த நிதியாண்டில் 69 ஐ.டி.ஐ கட்ட ரூ.264.83 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.அதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முந்தைய அ.தி.மு.க. அரசு, ரூ.6.25 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றது. இதற்காக ஆண்டிற்கு ரூ.48 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது போன்ற பணச்சுமைகள் இருந்தாலும், முதல்வரின் நிர்வாக திறமை காரணமாக தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 75 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். குடும்பத்திற்கு ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை முதல்வர் அறிவிப்பார்.

அ.தி.மு.க.வில் நடக்கும் போராட்டத்தில் கட்சி காலப்போக்கில் சுக்கு நூறாக உடைந்துவிடும். உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. தலைவர் செல்ல முடியாத இடங்களுக்கு போக கூடிய வாய்ப்பு அவருக்கு மட்டுமே உள்ளது. திரைப்படத்தின் வாயிலாக மக்களிடையே நல்ல வரவேற்பும் அவருக்கு உள்ளது. அவர் கருத்து சொல்லும் போது மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக தேர்தல் பணிகள் ஆற்றியதால் உதயநிதி ஸ்டாலின் இயக்கத்திற்கு தேவை. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அதிக இடங்களில் வெற்றியை தேடிதந்து அவர் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் சேவை கட்சிக்கும் தமிழகத்துக்கும் அவசியம் தேவை.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News