உள்ளூர் செய்திகள்

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி

Published On 2022-11-01 09:43 GMT   |   Update On 2022-11-01 09:43 GMT
  • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது.நேற்று கந்தசஷ்டி விழாவினையொட்டி கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் முன்பு உள்ள வீதியில் சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.

தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி,தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பெரகம்பி, மாவலிங்கை, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், குரூர், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன், எழுத்தர் தண்டபாணி தேசிங்கன், கந்தசஷ்டி விழாக்குழுத் தலைவர்,செ யலாளர்,பொருளாளர், உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கந்தசஷ்டி பெருவிழா நிறைவு பெற்றது.

Tags:    

Similar News