உள்ளூர் செய்திகள்

பேரிடர் ஒத்திகை பயிற்சி

Published On 2023-07-20 08:37 GMT   |   Update On 2023-07-20 08:37 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில் பேரிடர்கால ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
  • 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு

பெரம்பலூர்,

பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தொழிற்சாலைகள் , அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் என 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்ட அலுவலர் அம்பிகா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் பெரம்பலூர் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகன் மற்றும் முன்னணி தீயணை ப்பாளர் இன்பஅரசன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும், தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்பு மற்றும் பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது எவ்வாறு என்பது குறித்து செயல் விளக்கம், ஒத்திகை மூலம் விழி ப்புணர்வு ஏற்படு த்தினர். இதனை அரசு அலுவ லர்கள், பணியாளர்கள், மாணவ , மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.

Tags:    

Similar News