உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள்.

மக்கள் நல சேவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-15 09:54 GMT   |   Update On 2022-09-15 09:54 GMT
  • கிராமப்புற பகுதிகளில் உள்ள நிலம் இல்லாதோருக்கு வீட்டுமனை வழங்கக்கோரி போராட்டம்.
  • கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் எழுப்பினா்.

நாமக்கல்:

தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சாா்பில், நாமக்கல் நகரப் பகுதிகளில், கிராமப்புற பகுதிகளில் உள்ள நிலம் இல்லாதோருக்கு வீட்டுமனை வழங்கக் கோரி பல மாதங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு வருகிறது. 700-க்கும் மேற்பட்டோா் வழங்கியதில் இதுவரை ஒருவருக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் நேற்று நாமக்கல், பூங்கா சாலையில் தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பின் மாநிலத்தலைவர் ஈஸ்வரி தலைமையில்  200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நின்று கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் டி.எஸ்.பி. சுரேஷ் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News