உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

Published On 2022-11-22 09:56 GMT   |   Update On 2022-11-22 09:56 GMT
  • உலக மரபு வார விழா கடந்த 19-ந் முதல் 25-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடி வருகிறது.
  • மாணவர்களுக்கு தொல்லியல் பற்றி விளக்கம் அளித்தார்.

கிருஷ்ணகிரி,

தமிழகத் தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியவை இணைந்து, உலக மரபு வார விழா கடந்த 19-ந் முதல் 25-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடி வருகிறது. 19-ந் தேதி தேன்கனிக்கோட்டை தாலுகா சந்தனப்பள்ளி மற்றும் இருதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள கல்வெட்டுக்களை படித்து, அவ்வூர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக் கூறியதோடு, மரபுச் சின்னங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், ஓவியப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, பறவை, விலங்கு என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்புக்கு எனக்கு பிடித்த சுற்றுலா தளம், 11, 12-ம் வகுப்புகளுக்கு அருங்காட்சியக காட்சிப் பொருள் என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் பரிசு வழங்கி பாராட்டினார்.

வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்செல்வி, மாணவர்களை வாழ்த்திப் பேசினார். தொல்லியல் அலுவலர் பரந்தாமன், மாணவர்களுக்கு தொல்லியல் பற்றி விளக்கம் அளித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார் ஒருங்கி ணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஓவியப்போட்டியை அருங்காட்சியகப் பணியா ளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வானவில் பன்னீர்செல்வம் பரிசுக்குரிய ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்.

Tags:    

Similar News