கடத்தூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா
- மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- மகளிர் மன்றத்தினர் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
கடத்தூர் ,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி
யில் மாபெரும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
அதன் ஒரு பகுதியாக கடத்துார் பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் நீர்நிலைகள் சுத்தம் செய்தல், மற்றும் ஏரியின் கரையோரப்பகுதியில் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் மணி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜசேகரன், முன்னாள் பேருராட்சி தலைவர் மோகன், மன்ற உறுப்பினர்கள், கார்த்திக், பச்சியப்பன், சதீஸ்குமார், மயில்சாமி, சபியுல்லாது, நகர செயலாளர் பூமுரு கன், சிலம்பரசன், ஜோதி, கவிதா, இந்திராணி, மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக நீர்நிலைகள் காப்போம், சுற்றுச்சூழலை பாது காப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் என அனை வரும் உறுதிமொழி ஏற்றனர்.