உள்ளூர் செய்திகள்

ஓமல்நத்தம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்

Published On 2022-12-03 15:25 IST   |   Update On 2022-12-03 15:25:00 IST
  • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வழங்கினார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சி ஓமல்நத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஓமல்நத்தம் அரசு நடுநிலை பள்ளிக்கு இரும்பு கேட் அமைத்து கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளியில் உள்ள 148 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வழங்கினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முதியோர்களுக்கு போர்வைகளையும் வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி துணை செயலாளர் முருகன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து, இளைஞர் அணி ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, பள்ளியின் பி.டி.ஏ. தலைவர் முருகேசன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News