உள்ளூர் செய்திகள்
அரூர் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் சாவு
- அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக குட்டையம்மாள் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கொங்குவேம்பு பாரதி புரம் பகுதியை சேர்ந்தவர் குட்டையம்மாள் (வயது45). இவர் கடந்த 25-ந்தேதி அன்று ஊத்தங்கரை -அரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காளியம்மன் கோவில் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அவர் அரூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவைனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக குட்டையம்மாள் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.